சித்ராவின் மரணத்திற்கு எதிராக அவரது மாமனார் திரட்டும் ஆதாரங்கள்.. உண்மை வெளியே வருமா??

ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் முல்லையாக நடித்திருந்தார். தமிழ் நாட்டில் முல்லை போல் ஒரு மருமகள் வேண்டும் என்ற அளவிற்கு அவரது புகழ் பரவியது. இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் சித்ரா செய்து கொண்டது தற்கொலை தான் என்ற தகவலும் வெளியானது. இதையடுத்து சித்ராவின் கணவரான ஹேம்நாத்திடம் ஏழு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்க்காக ஹேம்நாத்தை போலீஸ் நள்ளிரவில் கைது செய்தனர். ஹேம்நாத்தின் தந்தை பல ஆதாரங்களை திரட்டி கொண்டு நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது சித்ராவின் தற்கொலையில் வேறு யாரோ சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை காப்பாற்றி என் மகனை சிக்க வைக்க பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சித்ரா சில நாளுக்கு முன்னாடி அவரது மாமனாரான ரவிச்சந்திரனிடம் எனது அம்மா திருமணத்திற்கு 5 லட்சம் மட்டும் தான் தருவதாக கூறிவருகிறார். அதுமட்டும் இல்லாமல் முன்னாடி நின்றுபோன திருமணத்திற்க்கும் எனது தாய் தான் காரணம் என்று மனம் வருந்தி கூறியுள்ளார். இதனால் அவரது மாமனார் திருமணத்திற்கு செலவாகும் மொத்த செலவையும் நானே ஏற்று கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். இதனால் மனதளவில் மிகவும் நெகிழ்ந்த சித்ரா நான் மருமகளாக உங்க வீட்டிற்கு வருவது என் பாக்கியம் என்று கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் சித்ராவின் செல் பேசியில் உள்ள சில தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளது மற்றும் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளது. சித்ராவுக்கு முன்னரே 3 காதல்கள் இருந்துள்ளது. அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. ஆதலால் இந்த வழக்கை பொறுத்தவரை பல மர்மங்கள் மறைந்துள்ளது. அதனால் இதனை சரியான முறையில் விசாரிக்கும் மாறு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டு கொள்கிறேன் என்று ரவி சந்திரன் கூறியுள்ளார். இதனால் போலீஸ் சித்ராவின் முன்னாள் காதலர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் என அனைவரையும் விசாரிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You'r reading சித்ராவின் மரணத்திற்கு எதிராக அவரது மாமனார் திரட்டும் ஆதாரங்கள்.. உண்மை வெளியே வருமா?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் மத்திய அரசு அவசர ஆலோசனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்