தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று..

தனுஷ் நடிக்கும் இந்தி படம் 'அட்ரங்கிரே'. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். நடிகர் தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய். கொரோனா கால ஊரடங்கு கட்டத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் இருந்தார் தனுஷ். படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்த பிறகு அடரங்கி ரே படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். சமீபத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலில் நடந்த ஷூட்டிங்கில் தனுஷ் கலந்து கொண்டார். அவருடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் கலந்துகொண்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. கடந்த வாரம் தனுஷ் தனது காட்சிகளை நிறைவு செய்தார்.

பிறகு படக்குழுவினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். டெல்லி மற்றும் ஆக்ராவில் நடிகர்கள் தனுஷ், அக்‌ஷய் குமார், மற்றும் சாரா அலிகான் ஆகியோருடன் படத்தின் படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனார் ஆனந்த் எல் ராய். தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கோவிட்19 பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு தொற்று இருப்பது தெரிந்தது. ஆனால் நான் எந்த அறிகுறிகளையும் உணரவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நான் நன்றாக உணர்கிறேன். சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நான் தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட எவரும் தனிமைப்படுத்தவும், அரசு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது என்றார் ஆனந்த எல் ராய்.இந்நிலையில் நடிகர் தனுஷ் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அவருக்கு தொற்று எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள், பணியாற்றிய குழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா அல்லது முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப் பட்டார்களா என்பது பற்றிய விவரம் எதுவும் இல்லை. இப்படத்தின் சில பகுதிகள் ஆக்ராவில் தாஜ்மஹால் தவிர சில பகுதிகள் வாரணாசி மற்றும் மதுரையிலும் படமாக்கப்பட்டது. ஹிமான்ஷு சர்மா எழுதிய, அட்ரங்கி ரே, 2021 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோகன்லால், மீனா நடிப்பில் உருவான திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்