மாஸ்டர் ரிலீஸ் டென்ஷனிலும் நடிகரை அழைத்து பேசிய விஜய்..

விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸின்போது தியேட்டரில் 100 சதவீத டிக்கெட் அனுமதி தரவேண்டும் என்று நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன்படி 100 சதவீத டிக்கெட் அனுமதி தரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசும் 100சதவீத டிக்கெட் அனுமதிக்க கூடாது என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இதையடுத்து 100 சதவீத அனுமதி ரத்தானது. இதனால் படக்குழு அப்செட் ஆனது. ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை 13ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். மாஸ்டர் ரிலீஸ் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் இளம் நடிகரின் நடிப்பு குறித்து அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். மலையாள நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ். இவர் பாவகதைகள் என்ற ஒடிடி தள படத்தில் நடித்திருந்தார். இதில் 4 இயக்குனர்கள் இயக்கிய குறும்படங்கள் ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டது. சுதா கொங்கரா இயக்கிய படத்தில் காளிதாஸ் நடித்திருந்தார்.

அந்த படத்தை பார்த்த விஜய், காளிதாசை அழைத்து பாராட்டினார். இதுகுறித்து காளிதாஸ் வெளியிட்டுள்ள மெசேஜில். 'நல்ல விஷயம் நடக்குமா என்று எதிர்பார்க்கும் நேரத்தில் மாஸ்டர் மாணவனை வாழ்த்துவதுபோல் விஜய் சார் என்னை அழைத்து பாவ கதைகள் படத்தில் நான் நடித்ததைப்பார்த்து பாராட்டினார். இதற்காக அவர் நேரம் ஒதுக்கி அளித்த இந்த பாராட்டு எனக்கு பெரிய விஷயம் என்றார். அத்துடன் விஜய்யுடன் இருக்கும் படத்தையும் காளிதாஸ் பகிர்ந்தார்.

You'r reading மாஸ்டர் ரிலீஸ் டென்ஷனிலும் நடிகரை அழைத்து பேசிய விஜய்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்