எஸ் டி ஆர், கவுதமுடன் இணைந்த நடிகர்..

சிம்பு என்கிற எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப் பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் ஓபிலி. என்.கிருஷ்ணா கூறியதாவது:மிகவும் கனமான அமீர் எனும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் கலையரசன். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரம் ஆகும். பிரபல நடிகராகவும், முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் உள்ளவரை நடிக்க வைக்க நினைத்தேன். கலையரசனை அணுகும்போது முதலில் இப்படத்திற்கு ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது.ஆனால் படத்தில் கதாபாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றார்.

இப்படத்தை கே.ஈ.ஞான வேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார், “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் கோடைக் காலத்தில் துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது பத்து தல. கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார்.இந்நிலையில் நரதன் இயக்க ஒப்பந்தமான அந்தப் படம் கைவிடப்பட்டு தற்போது இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார்.

You'r reading எஸ் டி ஆர், கவுதமுடன் இணைந்த நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகுபலி பட ஹீரோ பூஜையில் கே ஜி எஃப் ஸ்டார்.. நாளை தடபுடல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்