உண்மை சம்பவத்தில் சசிகுமார்.. விஜய் சேதுபதி பட இயக்குனர் டைரக்‌ஷன்..

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷய மல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க் கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை 'க/பெ ரணசிங்கம்' என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் இயக்குனர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக் கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான்.

தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.விஸ்வநாதன் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று நடைபெற்றது.

இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல் எழுதுகிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். டி.சிவாநாதீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலை பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழில் உண்மை சம்பவங்களாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை, சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர், நுங்கம்பாக்கம் பெண் கொலை வழக்கு எனப் பல படங்கள் உருவாகி திரைக்கு வந்துள்ளன. சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்திலும் நடித்து வருகிறார். திருமணம் எனும் நிக்ஹா படத்தை இயக்கிய அனீஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் வாணி போஜன், பிந்தும் மாதவி ஜோடியாக நடிக்கின்றனர்.

You'r reading உண்மை சம்பவத்தில் சசிகுமார்.. விஜய் சேதுபதி பட இயக்குனர் டைரக்‌ஷன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்