தனுஷ் நடிகை வெளியிட்ட வியர்வை சொட்டும் வீடியோ..

நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன்; என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவென்ஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர்கள் ருஸோ சகோதரர்கள் இயக்குகிறார்கள். இந்தியில் கடந்த 2013ம் ஆண்டு ராஞ்சனா படம் மூலம் ஹீரோவாக நடித்தார் தனுஷ் அதன்பிறகு 2014ம் ஆண்டு அமிதாப் படத்தில் நடித்தார்.

தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கும் அடரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார். இவர் இந்தி பிரபல நடிகர் சயீப் அலிகான்- அம்ரிட்டா தம்பதிகளின் மகள். சாரா அலிகான் சில மாதங்களுக்கு முன் போதை மருந்து வழக்கில் இழுத்துவிடப்பட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருத்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் 3 நடிகைகளைப் போதை தடுப்பு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். அதில் சாரா அலிகானும் ஒருவர்.

அடராங்கி ரே படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த சாரா அலிகான் படப் பிடிப்பு முடித்துக்கொடுத்து விட்டு சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றார். அங்கிருந்தபடி அவர் தனது படங்களை ரசிகர்களுக்கு விருந்தாகப் பகிர்ந்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்தார். விடுமுறை பயணம் என்றாலும் தனது அன்றாட உடற் பயிற்சியைத் தவறாமல் செய்வதாகத் தெரிவித்திருக்கிறார். ஊஞ்சல் கட்டி அதில் கவிழ்ந்த நிலையில் படுத்தபடி இருக்கும் சாரா அந்தரத்தில் ஊஞ்சல் ஆடியபடி வியர்வை சொட்டச் சொட்ட யோகா செய்தார்.

You'r reading தனுஷ் நடிகை வெளியிட்ட வியர்வை சொட்டும் வீடியோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்