பிக் பாஸை உலுக்கும் அடுத்தடுத்து மரணங்கள்.. பயில்வான் பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு..

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பாலாஜி. இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். மற்ற போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசுவது, பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சனமுடன் சண்டை பிடிப்பது போன்றவற்றையே வழக்கமாக வைத்து கொண்டார். கமலஹாசன் அவர்கள் பாலாஜியின் தவறை சுட்டி காட்டியதில் இருந்து பாலாஜி அவரது கோவத்தை மெல்ல மெல்ல குறைத்து கொண்டார். ஆனாலும் சில சமயங்களில் கோவம் தலைக்கேறி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மக்களிடையே தனது பெயரை கெடுத்துக்கொள்வார்.

அப்பா, அம்மா இரண்டு பேரும் குடித்துவிட்டு இரவில் என்னை துன்புறுத்துவார்கள் என்று அவரது வளர்ப்பு பற்றி கூறும் பொழுதே மக்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார் பாலாஜி. சொல்லபோனால் இவர் தான் பிக் பாஸ் சீசன் 4 வின்னர் என்றெல்லாம் கிளம்பியது. ஆனால் இவரது ஈகோ, கோவம் ஆகியவை அவரது மேல் இருந்த நல்ல எண்ணத்தை அழித்து விட்டது என்று கூறலாம். எல்லா சண்டையும் போட்டு விட்டு கடைசியில் குழந்தை போல மன்னிப்பு கேட்பது பாலாஜியின் குணமாக இருந்தது. இந்த குணம் அனைவரால் ஈர்க்கப்பட்டு பலர் பாலாஜியின் ரசிகர்களாக தலை தூக்கினார்கள்.

இதனின் பயனாய் பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு பல நேர்காணல் அவர் வழங்கி இருந்தார். அவரது ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி இருந்தார். பல திரைப்பட வாய்ப்புகளும் அவரை நெருங்க தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் அனிதா சம்பத் அவரது தந்தையை இழந்து விட்டார். இதையடுத்து பாலாஜியம் தனது தந்தையும் இழந்துள்ளார். இவரது சோசியல் மீடியா பக்கத்தில் 'இதுவும் கடந்து போகும்' என்று பாசிடிவ்வாக கூறியுள்ளார். இவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பாலாஜிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வீட்டில் அடுத்தடுத்து அசம்பாவிதம் நிகழ்வது குறித்து ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

You'r reading பிக் பாஸை உலுக்கும் அடுத்தடுத்து மரணங்கள்.. பயில்வான் பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவால் மூடப்பட்ட கல்லூரிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கும்.. அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்