விஷால் நடித்த ஆக்‌ஷன் பட பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி.. சக்ரா பட ரிலீஸ் சிக்கல் விவகாரம்..

நடிகர் விஷால் நடித்துள்ள படம் சக்ரா. இப்படத்தை ஆனந்தன் இயக்கி உள்ளார். ஷ்ரத்த ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இப்படம் முடிவடைந்த நிலையில், ஒடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டப்பட்டது. இந்நிலையில் டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் ஐகோர்ட்டில் விஷால் மீது வழக்கு தொடர்ந்தார். தாங்கள் தயாரித்து ஆக்‌ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்தனர். இப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடி 29 லட்சம் 57 ஆயிரத்து 468 ரூபாய் தருவதாக விஷால் ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்தளித்தார். அதன் பேரில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் விஷால் ஒப்புக்கொண்டபடி பணத்தை தரவில்லை. எனவே சக்ரா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டார்.

மேலும் சக்ரா படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்தன் எங்களிடம் ஒரு கதை கூறினார். அதை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிறகு அந்த படத்தை விஷாலை வைத்து இயக்கினார். அந்த படம்தான் சக்ரா என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்‌ஷன் படத்தில் ஏற்பட்ட நஷடத்தை ஈடு செய்ய ரு; 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் கோர்ட்டில் அளிக்க வேண்டும். அதன்பிறகு சக்ரா படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றார். மீதுமுள்ள தொகையை பட ரிலீஸுக்கு பிறகு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தை சுமூக பேசி தீர்க்க நடுவர் ஒருவரை டிரைடண்ட் நிறுவனம் நியமிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் அப்பீல் செய்தார். அந்த வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. சமரச தீர்வு காணும் வரை ஒரு கோடியை உயர்நீதிமன்ற பதிவாளரின் பெயரில் வைப்பு நிதியாக செய்ய வேண்டும். இதில் இரு தரப்பினரும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதனை இரு தரப்பும் ஏற்றுக்கொண் டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

You'r reading விஷால் நடித்த ஆக்‌ஷன் பட பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி.. சக்ரா பட ரிலீஸ் சிக்கல் விவகாரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனிப்பான சுரைக்காய் பாயசம் செய்வது எப்படி?? செம டேஸ்ட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்