இளையராஜா ஸ்டுடியோவுக்கு ரஜினி விசிட்..

கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்துதான் இசைஞானி இளையராஜா பல்லாயிரம் பாடல்கள் கம்போஸிங் செய்ளித்தார். 80களின் பாடல்கள் என்றால் இளையராஜா என்ற முத்திரை பதிந்துவிட்டது. இன்றைக்கும் அவரது பாடல்கள் ஒலிக்காத நாளே கிடையாது. 80 காலகட்ட படங்கள் இப்போது உருவாக்கப்பட்டாலும் இளையராஜா பாடலை பின்னணியில் சுழலவிட்டுத்தான் படமாக்குகின்றனர். கடந்த சில வருடங்களாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் மோதல் நிலவி வந்தது. பிரசாத் இசை கூடத்திலிருந்து இளையராஜாவை ஸ்டுடியோ நிர்வாகம் வெளியேறச் சொன்னது.

இந்த விவகாரம் ஐகோர்ட் வரை சென்றது. கோர்ட் உத்தரவுக்கு பின் இளையராஜா பிரசாத் ஸ்டியோவிலிருந்து தனது உடைமகளை ஆட்களை அனுப்பி அங்கிருந்து திரும்ப எடுத்துக் கொண்டார். அத்துடன் இந்த பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இளையராஜா சொந்தமாக தி நகரில் ரெகார்டிங் ஸ்டுடியோ கட்டி உள்ளார். இளையாராஜா என்று பெயரிடப்பட்டுள்ல அந்த ஸ்டியோ சமீபத்தில் திறக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்துக்காக இளையராஜா அந்த இசை கூடத்தில் முதன்முறையாக அமைத்தார். இந்தபடத்தில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் சூரி நடிக்க விஜய்சேதுபதி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

இந்நிலையில் இளையராஜா கட்டியுள்ள இந்த ஹைடெக் ஸ்டுடியோவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வந்து அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். இளையராஜாவுடன் சென்று ஸ்டுடியோவை சுற்றி பார்த்த ரஜினிகாந்த் வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டுடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த இளையாராஜா இசை ஸ்டுடியோவுக்கு நேரில் விசிட் செய்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

You'r reading இளையராஜா ஸ்டுடியோவுக்கு ரஜினி விசிட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி: ராகுல் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலாளர் தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்