கார் ஓட்டுவதில் மோசமான டிரைவர்.. ஸ்ருதி ஹாசன் சொல்கிறார்..

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கி இருந்தாலும் உடற்பயிற்சி, இசை கம்போசிங், செல்லப் பிராணியுடன் விளையாட்டு என்று பொழுதைக் கழித்தார். லாக் டவுன் தளர்வில் ஷுட்டிங் தொடங்கியதும் லாபம் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்றுப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விஜய் சேதுபதியுடன் நடித்தார். எஸ் பி ஜனநாதன் இயக்கினார். பின்னர் தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் லாக்டவுன் தளர்வில் வெளியானது. படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் ஸ்ருதிக்கு ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. அந்த பெயர் கிராக் பட வெற்றி மூலம் நீங்கியது. இப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸுடன் சலார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படத்தை கே ஜி எ ஃ ப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸுடன் ஸ்ருதி கலந்து கொண்டு நடித்தார்.ஸ்ருதிஹாசன் சமூக வலைத் தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தினமும் ரசிகர்களிடம் மனம் விட்டு தனது தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவார்.

தற்போது மோசமான டிரைவர் பற்றி அவர் கூறி உள்ளார்.கார் ஓட்டுவதில் நான் ரொம்பவும் மோசம். ரொம்பவே தடுமாறுவேன். அதனால் நான் தனியாக கார் ஓட்டி செல்வதைத் தவிர்த்து விடுவேன். ரொம்பவும் அவசியம் தவிர்க்க முடியாத சூழல் என்றால் ஓட்டுவேன். பெட்ரோல், டீசல் கார்களை விட எலக்ட்ரிக் கார் பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து. அது சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றது. அதை வாங்கி பயன்படுத்த முயற்சி செய்யுங்கள் . என்னிடம் எலக்ட்ரிக் கார் இல்லை. சீக்கிரம் வாங்க உள்ளேன்.
இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

You'r reading கார் ஓட்டுவதில் மோசமான டிரைவர்.. ஸ்ருதி ஹாசன் சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகரின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்