5 சவரன் தங்க பதக்கத்துடன் நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருது.. முதல்வர் வழங்கினார்..

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சினிமா மற்றும் பிற துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கும் தரப்படுகிறது. 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், ராமராஜன், பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்குக் கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்புக் கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதற்கான விழா எளிமையாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.கலைமாமணி விருதுடன் 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் அளித்தார். ஏற்கனவே கலைமாமணி விருது பெற்று வறுமையில் உள்ள கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் முதல்வர் வழங்கினார்.முன்னதாக கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் முதல்வர் , துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

You'r reading 5 சவரன் தங்க பதக்கத்துடன் நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருது.. முதல்வர் வழங்கினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி பற்றி டிவிட்: நடிகை ஓவியா திடீர் விளக்கம்.. என்ன சொன்னார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்