இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் பிரேமம் அனுபமா

பெயரிடப்படாத புதிய படத்தில் அனுபமா

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் 'கொடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து  தெலுங்கு படங்களில் பிஸி ஆகிவிட்டார். ஆனாலும் தமிழிலும் தனக்கான இடம் ஒன்றை பிடிக்க நினைத்த அனுபமா, சென்னை வந்து வாய்ப்புகளை தேடும் முயற்சி ஈடுபட்டார். அதன் விளைவாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சான்ஸ் கிடைத்துள்ளது. 

இன்னும் பெயரிடப்படாத அந்த புதிய படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறாராம் அனுபமா. 

இதையடுத்து தொடர்ந்து தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பல இயக்குநர்களையும் சந்தித்து அவர் வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

You'r reading இயக்குநர் பாண்டிராஜ் படத்தில் பிரேமம் அனுபமா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மைக்கேல் ராயப்பன் புகார்... சிம்பு பதில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்