நயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்?

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அன்று முதல் காதல் பந்தம் பலமாகி லிவிங் டு கெதர் இருவரும் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 2 வருடமாகவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பதாக ஒரு தகவல் வெளியாகும் ஆனால் சில நாட்களில் அது அப்படியே மாயமாகி விடும். சுமார் 7 வருடமாக இப்படியாக இந்த காதல் தொடர்கிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிகள் கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று சுற்றி வந்தனர். பிறகு இரு வரும் பிரபல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். வருடக் கடைசியில் திருமணம் என்று மீண்டும் ஒரு கிசுகிசு பரவும் கூடவே நயன் தாரா 4 புதிய படங்களில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வரும். நயன்தாரா இன்னும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவரது உறவு காதலாகவே நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.

கொரோனா காலகட்ட தளர்வில் விக்னேஷ் சிவனை தனிவிமானத்தில் கோவா அழைத்துச்சென்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இல்லற பந்தத்துக்குள் நுழையாமல் இன்னும் காதல் ஜோடி பறவைகளாக இவர்கள் சுற்றி வருகின்றனர். எந்த விழாவாக இருந்தாலும் இவர்களின் கொண்டாட்டத்துக்கு மட்டும் குறைச்சல் கிடையாது. எல்லா விழாவையும் கொண்டாடி படங்களைப் பகிர்வார்கள். காதலர் தினத்தையும் கொண்டாடியதுடன் நயன் தாரா ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டனர். நயன்தாரா சேலை அணிந்தும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்தும் இருக்கும் படத்துக்கு மாப்பிள்ளை, மணப்பெண் போல் காணப்பட்டனர். ஒவ்வொரு நாளும் காதலை கொண்டாடுவோம் (Celebrate Love Every Day) என்று அழகாகக் குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா .

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இவருடன் விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோரு.ம் நடிக்கின்றனர். இது தவிர மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியுடன் கலந்துகொண்டு நயன்தாரா நடிக்கவிருக்கிறார். அடுத்து நெற்றிக்கண் படப் பணி காத்திருக்கிறது. இவ்வளவு வேலைகள் காத்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கல்யாண வதந்தி கிளம்பி இருக்கிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய உள்ளதாக நேற்று முதல் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.

You'r reading நயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்