புராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..

60களுக்கு முன்பாக திரையுலகில் ராமாயணம், மகாபாரதம் புராணங்களும் ஹரிச்சந்திரா, அபிமன்யு, கர்ணன், கிருஷ்ண லீலா என புராணங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தன. கலைஞரின் பராசத்தி படத்துக்குப் பிறகு திரையுலகில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சமூகம் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அவ்வப்போது முருகன், விஷ்ணு, சிவன் போன்ற பக்தி படங்கள் வந்தன. 1990களுக்கு பிறகு பக்தி படங்களுக்கும் வரவேற்பு குறைந்தது. பிறகு இதுபோன்ற கதைகள் டிவி சேனல்களில் தொடர்களாக மாறின.
திரையுலம் திசை மாறி வியாபாரமானது.

அதற்கு என்ன தேவையோ அதுபோன்ற படங்கள் உருவாகத் தொடங்கின. இன்னும் தரம் குறைந்து அடல்ட் படங்கள் உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் அடல்ட் படங்களுக்கு எதிராக இயக்குனர் பாரதிராஜா போன்ற ஜாம்பவான்கள் குரல் கொடுத்தனர்.கடந்த சில வருடங்களாக மீண்டும் சரித்திர மற்றும் புராண படங்களுக்கு திரையுலகம் திரும்பி இருக்கிறது. பாகுபலி, செ ரா நரசிம்ம ரெட்டி, மணிகர்ணிகா, பத்மாவதி எனச் சரித்திர படங்களும். ஸ்ரீராம ராஜ்யம், மூக்குத்தி அம்மன்போன்ற புராண மற்றும் பக்தி படங்களும் வெளிவந்தன. தற்போது பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தை மையமாக வைத்து ஆதி புருஷ் என்ற படம் உருவாகிறது. அந்த வரிசையில் சீதா என்ற புராண படம் உருவாகிறது.

பாகுபலி, மணிகர்னிகா போன்றவற்றுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய விஜய்யேந்திர ரெட்டி சீதா ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கு உள்ளார். ராமாயணம் உருவாகக் காரணமாக இருந்த சீதாவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் முக்கிய சம்பவங்கள் நடந்தன என்பதை இக்கதை உள்ளடங்கி இருக்கும் . தமிழ், தெலுங்கு. இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தை அல்லவ்க தேசாய் இயக்குவதுடன் ஸ்கிரிப்ட் பணியில் விஜயேந்திர பிரசாத்துடன் இணைகிறார். இப்படத்தில் விஷூவல் எப்ஃக்ட் அதிகளவில் இடம் பெறுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.

சரித்திர மற்றும் புராண படங்கள் உருவாக மிகப் பெரிய தொகை செலவு செய்தால் தான் உருவாக்க முடியும். அதற்கும் சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். ஏற்கனவே பாகுபலி செ ரா நரசிம்ம ரெட்டி, பத்மாவதி, மணிகர்ணிகா போன்ற சரித்திர படங்கள் வெற்றி அடைந்தன. அந்த ஆசையில் தற்போது ஆதி புருஷ், ஆர் ஆர் ஆர், ஆச்சார்யா போன்ற படங்கள் பல கோடிகள் செலவில் உருவாகின்றன. இதுபோன்ற படங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைத்தால் தயாரிப்பாளர்கள் மேலும் இத்தகைய பாணி படங்களை அதிகளவில் உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.மீண்டும் புராண சரித்திர காலத்துக்குப் படங்கள் திரும்புகிறதோ என்ற கேள்வியும் எழும்பி உள்ளது.

You'r reading புராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி அடித்தால் அது சாதனை சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் என்ன பிரச்சனை?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்