குக் வித் கோமாளி புகழ் திறந்த கடை.. செல்பியால் வந்த சோகம்!

குக் வித் கோமாளி புகழ் செல்போன் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரைக்காண அதிக கூட்டம் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அவர் தனது ஹியூமர் சென்ஸ் மூலம் மக்களிடையே பிரபலமானார். மேலும் சின்னத்திரையிலிருந்து அவர் வெள்ளித்திரைக்கும் நுழைந்திருக்கிறார். விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார். இவரது நகைச்சுவைக்கெனவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இவர் மட்டுமின்றி குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். தர்ஷா குப்தா திரௌபதி பட இயக்குநரின் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் பவித்ரா லட்சுமியும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குக்வித் கோமாளி பிரபலங்களை பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் அவர்களை மக்கள் கொண்டாடுவதால் அவர்களை கடைதிறப்பு விழா உள்ளிட்ட விளம்பரங்களுக்கு சிலர் அழைக்கின்றனர்.

பொதுவாகவே தொலைக்காட்சி பிரபலங்கள் வெளியில் வந்தால் அவர்களைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடும். அந்த வகையில் குக்வித் கோமாளி பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களைப் பார்க்க ரசிகர்கள் கூடி விடுவார்கள். அப்படித்தான் நெல்லை வண்ணார்பேட்டையில் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் புகழ். அப்போது குக்வித் கோமாளி புகழ் வந்துள்ளார் என கூறி அங்கிருந்த ஏராளமானோர் அவரைக்காண திரண்டு விட்டனர்.

அப்போது கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் கடையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். கடை திறப்பு விழா அன்றே கடையை அதிகாரிகள் சீல் வைத்திருப்பதால் உரிமையாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

You'r reading குக் வித் கோமாளி புகழ் திறந்த கடை.. செல்பியால் வந்த சோகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்களால் தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் – தாய் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்