21G அரசு பேருந்து டு காஸ்ட்லி BMW கார்.. தமிழ் புத்தாண்டில் ரம்யா பாண்டியன் `கெத்து போஸ்!

நடிகை ரம்யா பாண்டியன் விலைய உயரந்த பிஎம்டபள்யூ கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த காருடன் அவர் நின்றிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியன் வாங்கியிருக்கும் காரின் விலை ரூ.70 லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இயக்குநர் ராஜூமுருகனின் முதல் படமாக ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ரம்யா பாண்டியன். அப்போது ரம்யா பாண்டியன் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பாரத்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனது மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரம்யா பாண்டியன். இந்த போட்டோஷீட் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க பாதை அமைத்து கொடுத்தது.

அதுமட்டுமின்றி, பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது. தற்போது மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் காருடன் நின்று போஸ் கொடுக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருப்பதாக அவரது சகோதரர் அதில் குறிப்பிட்டுள்ளார். நீல நிறத்தில் இருக்கும் அந்த கார் கெத்தாக நின்றபடி ரம்யா போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். மேலும், 2011-ம் ஆண்டு 21G அரசு பேருந்தில் பயணித்ததாகவும் 2021-ல் பிஎம்டபிள்யூ ஜிடி வகை சொகுசு காரை வாங்கியிருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பிக்பாஸில் பங்கேற்ற சம்யுக்தா வாழ்த்து தெரிவித்து கமெண்ட் பதிவிட ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You'r reading 21G அரசு பேருந்து டு காஸ்ட்லி BMW கார்.. தமிழ் புத்தாண்டில் ரம்யா பாண்டியன் `கெத்து போஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 8ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் ரெம்டெசிவர் - கள்ளச்சந்தை புகாரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்