விவேக் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 திரைப்படங்கள்

நடிகர் விவேக் மரணமடைந்த நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகர் விவேக் சிரிப்பு நின்ற நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக மூன்று படங்கள் திரைக்கு வர உள்ளன.

நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. வெங்கட கிருஷ்ணா ரோஹாந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேப்போல், லெஜண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விவேக். ஏற்கனவே குலு மணாலியில் நடிகர் விவேக், லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருளுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார். அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்திருக்கும் காட்சிகளுக்கு டப்பிக் ஆர்ட்டிஸ் கொண்டு பின்னணி குரல் கொடுத்து அந்தக் காட்சிகள் இடம்பெறுமா அல்லது, விவேக்கின் கதாபாத்திரத்தை நீக்கி, அதற்கு பதிலாக வேறு கதாபாத்திரம் சேர்க்கப்படுமா என தகவல் வெளியாகவில்லை.

You'r reading விவேக் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 திரைப்படங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “மஞ்ச காட்டு மைனா” – நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்…

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்