தனயனை தேடி போனாயோ! – விவேக் குறித்து ராஜ்கிரண் உருக்கம்!

மறைந்த நடிகர் விவேக் குறித்து ராஜ்கிரண் உருக்கமாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். மேலும் விவேக்கின் பிரிவை ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் எதிர்பார்க்ககாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரிடம் மட்டுமல்லாது மக்கள் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.


திரைப்படத்தில் சமூக கருத்துகளை தெரிவித்து வந்தவர், நடிகர் என்பதைத் தாண்டி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்த விவேக் தனது 1 கோடி மரக்கன்றுகள் நடும் கனவை எட்டிப்பிடிக்கும் முன் இந்த உலகை விட்டு மறைந்தார். இதையடுத்து மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக்கின் உடல் தமிழக காவல்துறையினரின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து உருக்கமாக கவிதை வடித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
ராஜ்கிரண் விவேக்கிற்காக எழுதிய கவிதை:

தம்பி விவேக்,
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,
அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்
எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது...
இப்பொழுது,
தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ
எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது...
என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது...” இவ்வாறு முடிவடைகிறது ராஜ்கிரணின் கவிதை.

You'r reading தனயனை தேடி போனாயோ! – விவேக் குறித்து ராஜ்கிரண் உருக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இஸ்ரேலில் வாடகை செக்ஸ் சிகிச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்