திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுவே காரணம்: தபு ஓபன் டாக்

தமிழில் காதல் தேசம், இருவர், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை தபு. இந்தியில் மிக பிரபலம். 46 வயது ஆகும் தபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதற்கான காரணத்தை கூறியுள்ளார் தபு. "திருமணம் செய்யாமல் தனியாக தான் வாழ்கிறேன். திருமணம் செய்யாமல் இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். சிலர் திருமண வாழ்க்கை சிறந்ததா? திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதா? என கேட்கின்றனர்.
 
எனக்கு அதற்கான பதிலை சொல்ல முடியவில்லை. ஒரு திசையில் மட்டுமே நான் வாழ்ந்து வருகிறேன். மற்றுமொரு வாழ்க்கையான திருமண வாழ்க்கை பற்றி எனக்கு தெரியாது. அப்படி தெரிந்து இருந்தால் எந்த வாழ்க்கை சிறந்தது என்று கூறுவேன்.
 
எனக்கு திருமணம் ஆகாததற்கு நடிகர் அஜய் தேவ்கான் ஒரு காரணம் என கூறினார் தபு. நானும் அஜய்யும் சுமார் 25 ஆண்டுகள் நண்பர்கள். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அவர் என்னுடன் பயணித்து வருகிறார். 
 
என்னுடன் இருந்த நிமிடங்களை அவரும் உணர்வார். அவரால் தான் நான் திருமணம் செய்யாமல் வசித்து வருகிறேன். எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்றும் கூறினார் தபு. நடிகர் அஜய் தேவ்கான் ஏற்கனவே 1999 ஆம் ஆண்டு நடிகை கஜோல்-லை திருமணம் செய்துகொண்டார்.

You'r reading திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுவே காரணம்: தபு ஓபன் டாக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் வார்த்தைப் போரில் கிரண்பேடி- நாராயணசாமி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்