விஸ்வரூபம் 2 போட்டியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜோடி

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகம் வெளியாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது.

அதே வேளையில் கமல்ஹாசன் பிரத்யேகமாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி "பிக் பாஸ்" தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படியிருக்க, பிக் பாஸ் முதல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஹரிஷ் கல்யாண், ரைசா இணைந்து நடித்துள்ள ப்யார் பிரேமா காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் இளசுகளை சுண்டிவிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சம்ம ஹிட் அடித்துள்ளது.

கடந்த வாரம் ப்யார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்தேறியது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

இந்நிலையில் கமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு போட்டியாக ப்யார் பிரேமா காதல் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading விஸ்வரூபம் 2 போட்டியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்...சிஆர்பிஎப் வீரர் கைது 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்