இன்னொரு படமா! எப்பதான் ரஜினி அரசியலுக்கு வருவீங்க?

When will Rajini come to politics ?

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசி ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், ஜனவரியில் மீண்டும் ஒரு புதிய படத்தில் கமீட் ஆகவுள்ளார்.

சிஸ்டம் சரியில்லை என ரஜினி சொன்னார். ஆனால், அந்த சிஸ்டத்தை சரிசெய்ய ஆன்மிக அரசியலை கையிலெடுப்பேன் என்றார். ஆனால், இதுவரை காலா, 2.0, பேட்ட படங்களை மட்டுமே ரஜினி கையில் எடுத்துள்ளார். சரி பேட்ட படம் தான் ரஜினியின் ஃபைனல் டச் அதற்கு அப்புறம் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பேட்ட படம் ஜனவரியில் வெளியானவுடன், ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியும், ஏ.ஆர். முருகதாஸும் தற்போது வேலை செய்து வருவதால், இருவரும் இணைந்து அதே பேனரில் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசியல் கதை ஒன்றை ரஜினி ஓகே செய்திருப்பதாகவும் டாப் சீக்ரெட் தகவல் கசிந்துள்ளது.

ஆன்மிக அரசியல் கலந்த படமாக அது இருக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. அப்போ ரஜினி நிஜ அரசியலுக்கு எப்போதுதான் வருவார்?

You'r reading இன்னொரு படமா! எப்பதான் ரஜினி அரசியலுக்கு வருவீங்க? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்கார் வெற்றிபெற காஞ்சிபுரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சாமி தரிசனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்