மீண்டும் ஒரு இந்து முஸ்லிம் காதல் கதை கேதார்நாத் டிரைலர் ரிலீஸ்!

Kedharnath trailer release

சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள கேதார் நாத் டிரைலர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது.

அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலிகான் இப்படத்தில் நடித்துள்ளனர். கேதார்நாத்தில் கடந்த வருடம் நடந்த வெள்ளப் பெருக்கு சம்பவத்தை இந்து – முஸ்லிம் காதல் கதையுடன் இணைத்து அபிஷேக் கபூர் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

முஸ்லிம் பெண்ணான சாரா அலிகானை இந்து பெண்ணாக படத்தில் மாற்றியுள்ளனர். இந்து நடிகரான சுஷாந்தை இஸ்லாமிய இளைஞராக படத்தில் நடிக்க வைத்துள்ளனர். பாம்பே படத்தில் இருந்து இந்த ட்விஸ்ட் மற்றும் மாறவே இல்லை. மதப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க இந்த திட்டம் பலனளிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இரு மதப் பிரிவினருக்கிடையே ஏற்படும் மோதலால் இவர்கள் காதல் பிரிவதும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் வெள்ளத்தால் இவர்களது காதல் சேர்ந்ததுமே இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் டிரெண்டிங்கில் கேதார்நாத் படம் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. நாயகி சாரா அலி கான் ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தை தனியாக பிடித்து சாதனை படைத்தது. இதற்கு காரணம் விழாவில் அவர் அணிந்து வந்த பூப்போட்ட காஷ்ட்யூம் தான்!

You'r reading மீண்டும் ஒரு இந்து முஸ்லிம் காதல் கதை கேதார்நாத் டிரைலர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலையில் பெண்கள் அனுமதி வழக்கு: மறு சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்