சர்வம் தாளமயம் டீஸர் ரிலீஸ்!

Sarvam Thalamayam movie Teaser release

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது.

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர். இந்தியா முழுவதும் பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஜி.வி. பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கியுள்ளார் ராஜீவ் மேனன்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பீட்டர் ஜான்சன் எனும் இளைஞன், இசையின் மீது கொண்ட காதலால் கர்நாடக சங்கீதத்தை கற்க முயல்வதும், மதத்தை காரணம் காட்டி அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும், பின்னர் எவ்வாறு அவன் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறுகிறான் என்பதே படத்தின் மையக் கருவாக உள்ளது.

எதை கேட்டாலும் அப்படியே பாடக் கூடிய திறன் உடைய பல பேர் கர்நாடக சங்கீதம் கற்காமலேயே அதில் தேர்ச்சி பெற்று உலகில் பாடிவருவது குறிப்பிடத்தக்கது. இசை ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. டிசம்பர் 28ஆம் தேதி படம் ரிலீசாகிறது.

You'r reading சர்வம் தாளமயம் டீஸர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குளிர்கால சளித்தொல்லையிலிருந்து விடுபட சில குறிப்புகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்