பத்தாவது குழந்தைக்கு தந்தையான எட்டி மர்பி!

Eddie Murphy become father of tenth baby

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காமெடி நடிகர் எட்டி மர்பிக்கு, தற்போது பத்தாவது குழந்தை பிறந்துள்ளது.

ஒரு மனைவி மற்றும் நான்கு காதலிகள் மூலம் பத்து குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார் எட்டி மர்பி. 57 வயதாகும் எட்டி மர்பி, 2012ம் ஆண்டு காதலித்த வந்த பைகே பட்சர் என்ற பெண் மூலம் தற்போது பத்தாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். 

ஏற்கனவே பைகே பட்சருக்கு 2வயதில் இஸ்லி ஊனா மர்பி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், எட்டி மர்பிக்கும் பைகே பட்சருக்கும் பிறந்த 2வது குழந்தை இதுவாகும்.

தற்போது பிறந்துள்ள இந்த குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் எனப் பெயரிட்டுள்ளார்.

எட்டி மர்பி திருமணம் செய்வதற்கு முன்னமே பவுலட் மேக்நீலி, டாமரா ஹூட் என்ற இருவரை காதலித்து வந்தார். அவர்களின் மூலம் எரிக் எனும் 29 வயது மகளும், கிறிஸ்டியன் எனும் 28 வயது மகளும் மர்பிக்கு பிறந்தது.

பின்னர், நிக்கோல் மிட்செலை மர்பி திருமணம் செய்தார். இவர்களுக்கு மைல்ஸ் மிட்செல் என்ற 25வயது மகன் உள்ளார். ஆனால், பின்னாளில் நிக்கோலை மர்பி விவாகரத்து செய்து விட்டார்.

அதற்குப் பின் அவர் காதலித்த பெண்கள் மூலம் மற்ற குழந்தைகளுக்கு மர்பி தந்தையானார்.

இவர் பெரிய காமெடி நடிகர் என்று பார்த்தால், மிகப்பெரிய பிளே பாயாக உள்ளாரே என ஹாலிவுட்டில் பலரும் காதுபடவே பேசி வருகின்றனர்.

ஆனால், பத்தாவது குழந்தை பிறந்த சந்தோஷத்தை பட்சருடன் எட்டி மர்பி கொண்டாடி வருகிறார்.

You'r reading பத்தாவது குழந்தைக்கு தந்தையான எட்டி மர்பி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உரிமம் பெறாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்