கிறிஸ்துமஸ்க்கு வெளியாகிறது விஸ்வாசம் டீஸர்!

viswasm teaser coming on christmas

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி அடிச்சு தூக்கி தூள் கிளப்பி வருகிறது.

பேட்ட படத்துடன் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது, இந்த படத்தின் டீஸர் பற்றி எந்த செய்தியும் இல்லாமல் இருந்தது, ஆனால் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு கிறிஸ்துமஸ்க்கு டீஸரை எதிர்பாக்கலாம் என சிவா பதிலளித்தார்.

மதுரை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

You'r reading கிறிஸ்துமஸ்க்கு வெளியாகிறது விஸ்வாசம் டீஸர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்