காஞ்சனா 3 மோஷன் பிக்சர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Kanchana 3 motion picture release date announced

ராகவா லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும், காஞ்சனா 3 திரைப்படத்தின் மோஷன் பிக்சர் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் காஞ்சனா 3. ஏற்கனவே, முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததை அடுத்து, காஞ்னா 3 படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
திகில் படமான காஞ்சனா 3யை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 2017ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காஞ்சனா 3 படத்தின் மோஷன் பிக்சர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

You'r reading காஞ்சனா 3 மோஷன் பிக்சர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்