இலவச சாப்பாடுக்காக சிறுவனை கொலை செய்து சிறைக்கு சென்ற வாலிபர்: பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

பீகார்: வறுமை காரணத்தால் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வந்த இளைஞர், இலவச சாப்பாடு கிடைக்கும் என்பதால் 9 வயது சிறுவனை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா: பீகார் மாநிலம், சகார்சா மாவட்டத்தின் சிக்னிடோலா கிராமத்தை சேர்ந்த இளைஞர் அவனிஷ் குமார் (17). இவன், அதே கிராமத்தை சேர்ந்த சுர்பின் குமார் என்ற சிறுவனை கொலை செய்தான். பின்னர், அவனிஷ் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் தகவலை அவனிஷ் குமார் வாக்குமூலமாக அளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ அவனீஷ் குமார் தந்தையை இழந்து வறுமையில் வாடி வந்துள்ளார். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வந்துள்ளார். வயிற்றுப் பிழைப்பிற்காக கடினமான வேலைகளையும் அவனீஷ் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், சிறையில் இலவச சாப்பாடும், தங்குவதற்கு இடமும் கிடைக்கும் என கருதிய இளைஞர், அப்பகுதுயில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான் ” என தெரிவித்தனர்.

தனது சுயநலத்திற்காக, மனசாட்சியே இல்லாமல் சிறுவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading இலவச சாப்பாடுக்காக சிறுவனை கொலை செய்து சிறைக்கு சென்ற வாலிபர்: பீகாரில் அதிர்ச்சி சம்பவம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்திர கிரகணம் எதிரொலி பிர்லா கோளரங்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்