நைல் நதியில் படகு கவிழ்ந்து 22 சிறுவர்கள் பரிதாப பலி

சூடான் நாட்டில் உள்ள நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூடான் தலைநகர் கார்டவும் என்ற பகுதியின், வடக்கே அமைந்துள்ள நைல் நதியில், சுமார் 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயணம் செய்தனர். இவர்கள், பள்ளியில் படித்து வருகன்றனர்.

அப்போது, படகில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, படகு பாதி வழியிலேயே நின்றதை அடுத்து, திடீரென தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்து சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து, தகவல் அறிந்ததை அடுத்து மீட்புக் குழுவினர் விரைந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் 22 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading நைல் நதியில் படகு கவிழ்ந்து 22 சிறுவர்கள் பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக ரோபோக்கள் அறிமுகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்