மின்சார ரயில் மீது உயர் மின்னழுத்த கம்பி விழுந்ததால் பரபரப்பு

சென்னை: இரும்பிலியூர் வழியாக சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் மீது உயர் மின்னழுத்த கம்பி விழுந்ததால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பெரும் தீ விபத்தை தவிர்க்கப்பட்டது. இதனால், வேலூர்&விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அரோக்கோணத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக இன்று காலை மின்சார ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இரும்பிலியூரில் யாரும் எதிர்பாரா நேரத்தில், உயர் அழுத்த மின் கம்பி ஒன்று ரயில் மீது விழுந்து தீப்பொறி கிளம்பி உள்ளது. அதற்குள் சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கிவிடப் பட்டனர்.

இதற்கிடையே, ரயில்வே அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பாதிப்பால், மற்ற வழித்தடங்களில் ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மின்கம்பி அகற்றும் பணி நடந்து வருவதால், வேலூர்&விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

You'r reading மின்சார ரயில் மீது உயர் மின்னழுத்த கம்பி விழுந்ததால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புத்தாண்தை ஒட்டி மெட்ரோ ரயில் சிறப்பு சேவை: நாளை இரவு 12.30 மணி வரை நீட்டிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்