13 சதவீதம் குறைவு ! மாணவர்களின் எதிர்காலம் என்னாவது ?

13 % off :student future

இந்தாண்டில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்குப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளது இது கல்வியாளர்களிடையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரானாவின் தாக்கம் குறையாத பட்சத்தில் கல்லூரி இறுதி தேர்வைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்ற அறிவித்த பின்னரும் மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தளர்வு ஏற்படுத்தாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறையிலிருந்தே தமிழகம் மற்றும் சில மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலையிலும மாணவர் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு காட்டும் முனைப்பு பல கேள்விகளையும் , மாணவர் , பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகத்தில் எம்பிபிஸ் படிப்பிற்கு ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 4150 இடங்களும் , பிடிஸ் படிப்பிற்கு 1700 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரையும் , நீட் தேர்வு செப்டம்பர் 13 ம் தேதியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .கல்வியில் பின் தங்கிய மாநிலமான பீகாரில் கூட தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் தமிழகத்தின் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது .

You'r reading 13 சதவீதம் குறைவு ! மாணவர்களின் எதிர்காலம் என்னாவது ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 25 ஆயிரம் தொழிலாளர்களுக்காக பெப்ஸி வளாகத்தில் மருந்தகம் திறப்பு.. ஆர்.கே.செல்வமணி விளக்க அறிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்