3 கணவர்களை ஏமாற்றி உல்லாசமாக ஊர்சுற்றிய இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்.. ஈரோட்டில் பரபரப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் 3 கணவர்களை ஏமாற்றியதால் மிகவும் கோவம் அடைந்த இரண்டாவது கணவன் இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாடியை சார்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவியின் பெயர் பத்மா. இவர் தான் இந்த கதையின் நாயகி. சுந்தரராஜுடன் பத்மா சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மாவுக்கு அன்பரசன் என்ற ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது கணவருக்கு தெரியாமல் ஆறு மாசம் அன்பரசுடன் நெருங்கிய உறவில் இருந்துள்ளார். அன்பரசனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.

இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டு சேலத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். பத்மாவுக்கு இரண்டாவது திருமணமும் சலித்ததால் இவர்கள் தங்கி இருந்த அதே பகுதியில் உள்ள தமிழ்ச்செல்வன் என்பவருக்கு காதல் அம்பை எய்தினார். பத்மா நினைத்தது போலவே தமிழ்ச்செல்வனும் காதல் வலையில் சிக்கினார். பிறகு பத்மா அன்பரசனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி தமிழ்ச்செல்வனை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு வேறொரு வாடகை வீட்டில் குடியேறினர். அன்பரசன் தன்னை ஏமாற்றி வீட்டை விட்டு ஓடியதால் பத்மாவின் மேல் மிகுந்த கோவத்தில் இருந்தார்.

இந்நிலையில் பத்மா அவரது மூன்றாவது கணவனுடன் பைக்கில் உல்லாசமாக ஊர் சுற்றி வந்ததை கண்ட அன்பரசனின் மனதில் பயங்கர வெறி உண்டானது. இதனால் நடுரோட்டிலே பைக்கை வழி மறைத்து கையில் இருந்த கத்தியால் பத்மாவை சரமாரியாக தாக்கினார். பரிதாபமாக கிடந்த பத்மாவிற்கு யாரும் உதவிக்கு வராமல் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். இச்சம்பவத்தை செய்த அன்பரசே காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதனால் விரைந்து வந்த போலீஸ் பத்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்பரசன் கொடுத்த வாக்கு மூலத்தின் பெயரில் போலீஸ் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading 3 கணவர்களை ஏமாற்றி உல்லாசமாக ஊர்சுற்றிய இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்.. ஈரோட்டில் பரபரப்பு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்