முகம் மற்றும் மேனி அழகுக்கு!

எளிய வழியில் எப்படி முகம் மற்றும் மேனியை அழகூட்டலாம்.. ? இதோ சில டிப்ஸ்..

* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்

* முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்

* கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும். கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணமல் போகும்.

* முகபரு தழும்பு மாற புதினாசாறு 2 ஸ்பூன், எழும்பிச்சைசாறு 1 ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

* தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.

You'r reading முகம் மற்றும் மேனி அழகுக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வறுத்து அரைத்த சிக்கன் கறி-சூப்பர் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்