யோகாசனங்கள்:மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சஸ்சாங்காசனம்

சஸ்சாங்காசனம்

இவ்வாசனம் செய்வது மிக எளிது. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளுக்கு இவ்வாசனம் நற்பலனைத் தரும்.

செய்முறை:  

முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். பின்னர் இரண்டு கைகளையும் அந்தந்த பக்கத்தில் உள்ள குதிகாலின் மீது வையுங்கள். உங்களின் நெற்றி, முழங்காலில் ஒட்டியிருக்கும் படி முன்னால் குனிய வேண்டும்.. 

இடுப்பு பகுதியை முடிந்தவரை தூக்கவும். இது உங்களின் நெற்றியிலிருந்து மெதுவாக உச்சந்தலையை சென்றடைவதாக இருக்கவேண்டும். இப்படியாக 20 விநாடிகள் இருந்து, வஜ்ரான நிலைக்கு வந்து பின் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.  

பயன்கள்:  

இந்த யோகாசனம் செய்வதால் தைராய்டு, தைமஸ் சுரப்பிகள் நன்கு இயங்கும். சளி தொல்லை நீங்கும். மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் சஸ்சாங்காசனம் செய்துவந்தால், கூடிய விரைவில் பூரணகுணம் கிட்டும். 

You'r reading யோகாசனங்கள்:மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சஸ்சாங்காசனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாத்மாவின் 150வது பிறந்தநாள் ! நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்