வாகா எல்லையில் தீரன் அபிநந்தன்... விமானப் படை அதிகாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு #Abhinandan

Indias hero Wing Commander Abhinandan returns!

பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் ‘தீரன்’ அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையை வந்தடைந்தார். அவரை விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க அபி நந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார். இந்தியா முழுவதும் இம்ரான்கானின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லாகூரில் இந்திய தூதரிடம் அபிநந்தன் முதலில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லைக்கு அபிநந்தன் அழைத்து வரப்பட்டார்.

இன்று காலை முதலே வாகா எல்லையில் பொதுமக்கள் தேசிய கொடிகள் ஏந்தி அபி நந்தனை வரவேற்ககக் காத்திருந்தனர். அபிநந்தனை வாகா எல்லையில் இந்திய விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

You'r reading வாகா எல்லையில் தீரன் அபிநந்தன்... விமானப் படை அதிகாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு #Abhinandan Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீனவர்கள் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுகிறதாம் மத்திய அரசு... சாட்சாத் மோடி பேச்சுதான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்