பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஸ்விகி நிறுவன ஊழியர் இலவசமாக 200 ரூபாய் கூப்பன் அனுப்பி ஸ்விகி அடாவடி

Swiggy sexual harassment by delivery boy

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் 200 ரூபாய் கூப்பன் வழங்கிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு பொருட்களை வீடு தேடிச் சென்று ஸ்விகி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் உணவு பொருட்களை வழங்கிய ஸ்விகி நிறுவன ஊழியர் கைகைளை பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆப் மூலம் ஸ்விகி நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் உணவு பொருட்கள் வாங்க இலவசமாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை அனுப்பியது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர்ந்த கொடுமையை முகநூல் பக்கத்தில் அந்த பெண் விவரித்துள்ளார். டேலிவரி பாய் கொடுத்த உணவை சாப்பிட பிடிக்காமல் குப்பையில் வீசி எறிந்ததாகவும் வேதனையுடன் அவர் கூறியுள்ளார்.

 

You'r reading பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஸ்விகி நிறுவன ஊழியர் இலவசமாக 200 ரூபாய் கூப்பன் அனுப்பி ஸ்விகி அடாவடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி -உயர்கிறது கல்விக்கட்டணம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்