மும்பையில் வரலாறு காணாத மழை தவிக்கும் மக்கள்!

மும்பையில் வரலாறு காணாத மழை தவிக்கும் மக்கள்!

மும்பையில் பெய்த வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகராஸ்ட்ராவின் சில பகுதிகள், கொங்கன், கோவா, தெற்கு குஜராத் பகுதிகளில் வரும் வியாழக்கிழமை வரை கடும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் தொடர்ந்து 4வது நாள் பெய்த மழையால் நகரமே முடங்கிப் போனது. , போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரில் பஸ்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

30 ஆயிரம் பணியாளர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை காரணமாக நாக்பூர் - மும்பை துராந்தோ ரயிலின் சிலப் பெட்டிகள் அசாங்கன் அருகே தடம் புரண்டன. புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

மும்பை வெள்ளத்தை முதல்வர் மகராஸ்ட்ரா முதல்வர் ஃபட்னாவிஸ் காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி வழியாக பார்த்தார். மும்பையின் அனைத்து டோல்கேட்களும் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளம் வடியும் வரை கட்டணங்கள் வசூலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading மும்பையில் வரலாறு காணாத மழை தவிக்கும் மக்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோரக்பூர் குழந்தைகள் மரணம்; மருத்துவமனை கல்லூரி முதல்வர் கைது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்