இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றும். ஐ. நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

India will fulfill its responsibility. Prime Minister Modis speech

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேகேற்ற ஐ.நா.சபை கூட்டம் இன்று காணொளி மூலம் நடந்தது. சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது :

இன்றைய சவால்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த 8 மாதங்களாக கொரோனா தொற்றால் உலகமே போராடி வருகிறது. தீவிரவாதம் என்பது உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக பொருளாதாரத்தை சீர்திருத்த வழிகள் இருக்கின்றன. நாங்கள் வலிமையாக இருந்தபோது உலகிற்கு எந்த சுமையும் தரவில்லை. ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது.

இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம். ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது. உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது. அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா. எப்போதும் இந்தியா சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை. அனைத்து மதங்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது இந்தியா.

இந்தியா யாருக்கும் எப்போதும் எதிராக இருந்ததில்லை. எங்கள் வளர்ச்சியில் இருந்த திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பின் தங்கியதில்லை. உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம். அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும். அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும். மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம். இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது.

500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது. கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது. ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம். இந்தியப் பெண்கள்தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கும் தனித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You'r reading இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றும். ஐ. நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்