கேரள சிறுமியை பாராட்டிய பிரதமர் !

PM praises Kerala girl

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் " ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத்" என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் இமாச்சல பிரதேச மொழியில் எழுதப்பட்ட பாடல் ஒன்றை கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா என்பவர் பாடியுள்ளார்.

இதை அவரது பள்ளி நிர்வாகம் வீடியோ எடுத்த சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இசையில் ஆர்வம் உள்ள இந்த மாணவியை, வகுப்பு ஆசிரியையான தேவி உற்சாகம் ஊட்டி, பாடலை பாட வைத்துள்ளார். மேலும் " மாயி நீ மேரியே" எனும் இமாச்சல் மொழி பாடலை தேர்வு செய்தவரும் வகுப்பாசிரியையான தேவி ஆகும்.

இந்த வீடியோ வைரலானா நிலையில் இமாச்சலப் பிரதேச முதல்வரும் பாராட்டியுள்ளார். வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி கூறியதாவது " தேவிகா அவரது பாடலால் நம்மை பெருமையடைய வைத்துள்ளார். அவரது மென்மையான பாடல் ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற சாரம்சத்தினை வலுப்படுத்தி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

You'r reading கேரள சிறுமியை பாராட்டிய பிரதமர் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் கடற்கரைகள் தவிர சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறப்பு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்