மும்பையில் முககவசம் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்யனுமாம்..

மகாராஷ்டிராவில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்கள் தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என்று மும்பை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரானா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் பலர் முக கவசம் இல்லாமல் போது இடங்ககளுக்கு வந்து செல்வது தொடர்கிறது. இதை தடுக்க மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது இதன்படி மும்பையில் முக கவசம் அணியாமல் வருபவர்கள் இனி தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி, ஒருவர் கூறுகையில் இந்த நடவடிக்கை ஏற்கனவே அந்தேரி மேற்கு, ஜுஹு, வொசோவா போன்ற பகுதிகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, சாலைகளில் எச்சில் துப்பும் நபா்களுக்கு இதுபோன்ற நூதன தண்டனை வழங்கும் அதிகாரம் மும்பை மாநகராட்சிக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

You'r reading மும்பையில் முககவசம் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்யனுமாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்