மத்திய சிறைக்குள் செல்போன் செல்வதை தடுக்க உத்தரவு : புதுவை முதல்வர்

புதுச்சேரி சிறைகளில் கைதிகள் செல்போன்களை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய த்திற்கு ரூ. 3.17 கோடி செலவில் புதிய கட்டடிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் காவல்துறை பணி சிறப்பாக உள்ளது. கொரோனா குறைவதற்கு, காவல்துறை பணியும் ஒன்று. அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். காவல்துறையை நவீனமாக்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பேசியுள்ளேன்.

மத்திய சிறையில் இருக்கும் ரவுடிகள், உள்ளே இருந்து கொண்டு செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். சிறைக்குள் செல்போன், செல்வதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஆட்சியில் ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வந்தனர். மேலும் குற்ற சம்பவங்கள் அதிகளவில் இருந்தது. இதை நாங்கள் தடுத்து, சட்டம்- ஒழுங்கை சிறப்பாக வைத்து உள்ளோம் என்றார்.

You'r reading மத்திய சிறைக்குள் செல்போன் செல்வதை தடுக்க உத்தரவு : புதுவை முதல்வர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து.. ஜெய்சங்கருக்கு எதிரி.. யார் இந்த பிரமிளா ஜெயபால்?!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்