தண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வேகமாக தண்டால் எடுத்து பலரையும் அசர வைத்தார். தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணமாக கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி வந்தார். ராகுல்காந்தி. தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களிலும் பின்னர் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர் இன்று காலை குற்றாலத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் சென்றார் அங்கு வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். முலகுமூடு என்ற கிராமத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற ராகுல்காந்தி மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார். தன்னுடன் இணைந்து நடனம் ஆட முடியுமா என்று கேட்ட ஒரு மாணவியை ஓ எஸ் என்று சொல்லிவிட்டு மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரை தன்னருகில் அழைத்து அவர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இதன் பின்னர் உடற்பயிற்சி குறித்து ஒரு மாணவி கேட்க உடற்பயிற்சியின் மூலம்தான் என்னால் கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொள்ள முடிகிறது. நான் ஒரு நாள் என் கைக்கும், ஒரு நாள் ஒரு நாள் காலுக்கும், ஒரு நாள் நெஞ்சுக்கும் என பயிற்சி செய்கிறேன். இதனால் என்னால் முழுமையாக என் உடலைப் பேண முடிகிறது.

இதே போல் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். உடலுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் இதே போன்ற சமநிலை இப்போது தேவை என ராகுல் காந்தி பேசினார். இதை தொடர்ந்து மாணவி ஒருவர் உடற்பயிற்சி குறித்து கேள்வி கேட்க, உடனடியாக தரையில் படுத்து தண்டால் தரதரவென எடுத்தார். அந்த மாணவியும் தண்டால் எடுக்க முயன்று ராகுல் காந்தியிடம் தோற்றுப்போனார். ஒரு நிமிடத்தில் மாணவியை விட அதிகமான தண்டால்களை எடுத்து அனைவரையும் அதிர வைத்தார் ராகுல். மாணவிக்கு சவால் விடும் வகையில் ஒரு கையாலும் தண்டால் எடுத்தார் ஆனால் பாவம். அந்த மாணவியால் அதை செய்ய முடியவில்லை. இட்ஸ் ஓகே என்றபடி அந்த மாணவியை அழைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் ராகுல்.

You'r reading தண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்