உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆம் இடம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையின் தாக்கம் அதிவேகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசும் பல்வேறு அறிவுரைகள் மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:-

இதனிடையே, இந்தியாவில் இதுவரை 25,78,06,986 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 11,80,136 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3 ஆம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 2 ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.

You'r reading உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆம் இடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காலையில் காத்திருந்த அதிர்ச்சி – சென்னை போரூரில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்