24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3293 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 29,78,709 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 14,78,27,367 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

You'r reading 24 மணி நேரத்தில் 3 லட்ச பேர் கொரோனா நோயால் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரியில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனா பாதிப்பு குறையுமா??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்