ஒக்கி புயல் பாதிப்பு! பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவு-கேரளா அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரம் ஒக்கி புயல் உருவானது. இந்த ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவில் உள்ள கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் ஒக்கி புயலால் அடித்து மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஒக்கி புயலின் கோர தாண்டவத்தால் படகுகள் பல கவிழ்ந்தன. இதில் மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். கேரளாவில் மட்டும் இதுவரை 31 மீனவர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

You'r reading ஒக்கி புயல் பாதிப்பு! பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவு-கேரளா அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல சதியா...?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்