எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விவசாரத்தில், எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையுமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்தரிக்கையாளர் குறித்து எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்த விவகாரம் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், எஸ்.வி.சேகருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எஸ்.வி.சேகர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதனால், எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை. இதனால், முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், எஸ்.வி.சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் எஸ்.வி.சேகர் எந்நேரம் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது சீதையை கடத்துனது ராமரா...? இதென்ன புது கதை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்