புனேவுக்கு முதலிடம், சென்னைக்கு 14வது இடம்.. எதில் தெரியுமா ?

கவலையின்றி மக்கள் வசிக்கும் நகரங்களில் புனேவிற்கு முதலிடமும், சென்னைக்க 14வது இடமும் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆண்டுதோறும் கவலையின்றி மற்றும் நெருக்கடி இன்றி வசிக்கும் நகரம் எது என்பது குறித்து பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

இந்த பட்டியலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 2வது இடம் நவி மும்பைக்கும், மூன்றாவது இடம் மும்பைக்கும் கிடைத்துள்ளது.
தொடர்ந்து, திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்தன.

இந்நிலையில், கவலையின்றி, நெருக்கடியின்றி வசிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு 14வது இடமும், நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது.

மக்களின் வாழ்க்கைச் சூழல், சிறந்த நிர்வாகம், சமூக நிறுவனங்கள், பொருளாதார நிலை உள்ளிட்ட அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 111 நகரங்கள் கலந்துக் கொண்ட நிலையில், கொல்கத்தா நகரம் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading புனேவுக்கு முதலிடம், சென்னைக்கு 14வது இடம்.. எதில் தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கியது பி.வி.ஆர்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்