டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தலைநகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக இருந்து வரும் நாட்டின் தலைநகர் நகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளாலும் டெல்லி தவித்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதே தீர்வாகும் என்பது ஆட்சியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதனால், தலைநகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மன தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான மதன் பி.லோகுர், எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், "டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று ஏற்கனவே அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது என்றும், இதனால் இந்த மனு விசாரணைக்கு அவசியமில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You'r reading டெல்லிக்கு மாநில அந்தஸ்து: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இருப்பவர்களுக்கு சிந்திக்கும் மனநிலை இல்லை-ஹெச்.ராஜா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்