ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம்: தருண் அகர்வால் குழு! தமிழக அரசுக்கு பின்னடைவு

Sterlite Copper smelter closure not justified, says panel appointed by NGT

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம் என தருண் அகர்வால் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைய நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் டெல்லி தேசிய பசுமை தீர்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைய ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மற்றும் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியாகின.

இந்நிலையில் தருண் அகர்வால் குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம்; ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 

 

You'r reading ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்கலாம்: தருண் அகர்வால் குழு! தமிழக அரசுக்கு பின்னடைவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏய்.. நான் மட்டக்களப்பு கருணா அம்மான்... ட்விட்டரில் ரணில் கட்சிக்கு ஷாக்rsquo மிரட்டல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்