படகு தாறோம் என்று கண்ணீரில் மிதக்க விட்ட மோடி! மீனவர்கள் குமுறல்

Modis fishing project yet to take off in tamilnadu

டந்த 2017-ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 337 தமிழக மீனவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் வகையிலான படகு கட்டமைக்க ரூ. 80 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதில், 10 சதவிகிதம் தொகையை மீனவர்கள் செலுத்த வேண்டும். பல மீனவர்கள் ரூ. 8 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை யாருக்கும் படகு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறுகையில்,'' இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டுக்குள் முடிவதற்குள் 500 படகுகள் வழங்குவோம் என்று பிரதமர் அறிவித்தார். பலரும் பணம் செலுத்தி விட்டு படகுக்காக காத்திக்கின்றனர். மிகவும் கஷ்டமான சூழலில் இந்த தொகையை செலுத்தியிருக்கின்றனர். ஆனால், இதுவரை யாருக்கும் படகுகள் வழங்கப்படவில்லை. தற்போதுதான் 60 படகுகளுக்கு ஆர்டர் செய்துள்ளனர். மீனவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு மத்திய அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் '' என்கிறார்.

ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க படகு வழங்கப்பட்டல், டுனா போன்ற மீன்களை பிடிக்கலாம். இதனால், மீனவர்களின் வருவாய் ஆதாரத்தைப் பெருக்கலாம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், அறிவித்த திட்டங்களில் வேகம் காட்டாதுதான் தலையாய பிரச்னை. 

You'r reading படகு தாறோம் என்று கண்ணீரில் மிதக்க விட்ட மோடி! மீனவர்கள் குமுறல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ் சமூகத்தை இளைஞர்கள்தான் உருவாக்க முடியும்: சகாயம் ஐஏஎஸ் நம்பிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்