இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ? தோனியா ? ஸ்மித்தா ?

Who will win todays match? Dhoni? Smitha?

13வது ஐபிஎல் லீக்கின் நான்காவது போட்டி இன்று (22-09-2020) ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்து தன்னம்பிக்கை உடன் உள்ளது சென்னை அணி.இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடத் தயாராகி வருகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி .

சென்னை அணியைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கும் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் கடந்த போட்டியில் சரிவர விளையாடவில்லை எனினும் வாட்சன் மீதான நம்பிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று தோன்றுகிறது. ஆனால் முரளி விஜய் சரியான தாக்கத்தை ஏற்படுத்தாது சென்னை அணிக்கு ஒரு பலவீனமே. மிடில் ஆர்டரை பொறுத்தவரை ராயுடு , டியூ பிளசில் , கேதார் ஜாதவ் மற்றும் தோனி போன்றோர் தங்களின் பங்களிப்பை சரியான கலவையில் கொடுத்தால் இன்றைய போட்டியில் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காகத் தர முடியும்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை பியூஷ் சாவ்லா , ரவீந்திர ஜடேஜா போன்றோரின் சுழல் மாயாஜாலங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது. வேகப் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை தீபக் சஹர் , ஷர்துல் தாக்குர் , லிங்கி இஙகிடி போன்றோர் நேர்த்தியாகப் பந்து வீசினால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் .கடைசி போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் மிகுந்த நம்பிக்கையுடன் அனுபவ வீரர்களின் அசுர பலத்துடன் சென்னை களமிறங்கும்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனின் முதல் போட்டியை விளையாடத் தயாராகி வருகின்றனர்.

இந்த அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இல்லாதது அணிக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் . மேலும் கடந்த வாரம் நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் கொரோனா விதிகளினால் இந்த போட்டியில் விளையாட மாட்டார் இதுவும் அணிக்கு ஒரு பின்னடைவு ஆகும்.

கடந்த சீசன்களின் தொடக்கத்தில் இந்திய வீரர்களைக் கொண்டு விளையாடினாலும் கடைசி போட்டியின் போது வெளிநாட்டு வீரர்களை நம்பியே விளையாடி உள்ளது. ஆனால் இந்த சீசனில் தொடக்கம் முதலே வெளிநாட்டு வீரர்களை நம்பியே விளையாட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரைத் தலையில் காயம்பட்டு ஓய்விலிருந்த ஸ்டீவன் ஸ்மித் அணிக்குத் திரும்பியுள்ளது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தொடக்க ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை ராபின் உத்தப்பா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் / மனன் வோரா இறங்க வாய்ப்புள்ளது . மிடில் ஆர்டரை பொறுத்தவரை ஸ்டீவன் ஸ்மித் , சஞ்சு சாம்சன் போன்றோர் திறம்படச் செயல்பட வாய்ப்புள்ளது.பந்து வீச்சை பொறுத்தவரை டாம் கரண் , உனட்கட் , வருன் ஆரோன் , ஓஷோ தாமஸ் போன்றோர் அவர்களின் சிறப்பான திட்டமிட்ட பந்து வீச்சை நேர்த்தியாக வீசினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.ஷார்ஜா ஆடுகளத்தைப் பொறுத்தவரைத் துபாய் ஆடுகளத்தை விட சிறியது . மேலும் போட்டிகள் இரவு நேரத்தில் நடைபெறுவதால் பனிப்பொழிவு ஒரு முக்கிய பங்காற்றும் .

தோனியின் படை பல அனுபவசாலிகளையும் , எதிர்மறையான சூழ்நிலையை இலாகவமாகக் கையாளும் வீரர்களை உடையது எனவே ராய்ஸ் எந்தவிதமான தவறையும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற முயற்சி செய்யலாம்.இந்த ஆடுகளத்தைப் பொறுத்தவரை 170 ரன்கள் என்பது கடினமான இலக்காகும். முதல் பத்து ஓவரில் பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் மிகப் பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கலாம்.

You'r reading இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ? தோனியா ? ஸ்மித்தா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல தமிழ் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் என்றதால் அதிர்ச்சி.. மூடிய கதவுகளுக்கு பின்னால் நடப்பதற்கு ஆதாரம் எங்கு தேடுவது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்